ஆக்லாந்தில் மெத்தாம்பெட்டமைன் விநியோகத்தை இலக்காகக் கொண்டு பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஹெட் ஹன்டர்ஸ் கும்பலுடன் தொடர்புள்ள ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆபரேஷன் சால்மன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, Wairau Valley வில் உள்ள கும்பலின் தலைமையகம் உட்பட ஆக்லாந்து மற்றும் Northland முழுவதும் உள்ள ஏழு சொத்துக்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கையின் பொது சுமார் 80,000 டொலர் ரொக்கம், சிறிய அளவிலான துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 18, 25, 29 மற்றும் 57 வயதுடைய ஐந்து ஆண்கள், சப்ளைக்காக மெத்தாம்பேட்டமைன் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, North Shore மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்